Friday, June 26, 2009

இவ்வுலகம்

கவற்றுமடி அணியும்
அரிவையருட் சிலர்-தம்
கவின்ஒளி மலியும்
முக பாவனையால்
கவற்றி பொழிந்து
நல் ஆடவர்களை
கவற்றுவித்துவிடும்
உலகம் இது.

வறுமையின் அழைப்பு

அள்ள அள்ளக் குறையாமல்
வள்ளல் போல் அமுதளிக்கும்
தெள்ளிய அட்சய பாத்திரமே
நல்ல கோசிகன் பெறத்தவமிருந்ததும்
வல்ல கொடையில் தலையாய
கனிவான காமதேனுவே
இனியாவது உங்களின் வரவு
நனி விரைவாக...........ஏங்குகின்றோம்.

Saturday, June 6, 2009